இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த பகுதியின் சூழலில், அவருடைய மக்கள் தமக்கு விலையேறப்பெற்றவர்கள் என்று தேவன் நினைப்பூட்டுகிறார். அவர் அவர்களை உருவாக்கி மீட்டுக்கொண்டார். அவர் அவர்களை கைவிடுவதில்லை. அவர்கள் எப்படிப்பட்டதான சவால்கள் மற்றும் , சிரமங்களை எதிர்கொள்ளும்போதும் , அவர் அவர்களோடிருந்து, அவர்களை விடுவித்து, பாதுகாத்து ஜெயம்கொள்ளச் செய்கிறார் . இதே வாக்குறுதியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ; தேவனுடைய உண்மையைக் காண்பிக்க நமக்கு வரலாற்றின் பயனும் உண்டு. தேவன் தமது மக்களை எவ்வாறு பாதுகாத்து, எதிரிகளுடனான அடிமைத்தனத்திலிருந்து ஒவ்வொரு முறையும் மீட்டெடுத்தார் என்பதை நாம் காணலாம். தேவன் தம்முடைய பிள்ளைகளை மறப்பதில்லை !அவருடைய வாக்குத்தத்தத்தின் மூலமாய் இதை நாம் அறிகிறோம். வரலாற்றின் மூலமாய் நாம் இதை அறிகிறோம். விசுவாசத்தின் மூலமாய் நாம் இதை அறிகிறோம் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, எப்பொழுதும் என் அருகில் இருப்பதற்காக உமக்கு நன்றி. அநேக நேரங்களிலே நீர் என் அருகில் இருப்பதையும் , கையிட்டு செய்கிறதானக் காரியங்களில் உம்முடைய பாதுக்காவலையும், வரலாற்றில் உம்முடைய அதிசயமான வழிக்காட்டுதலையும் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததை அறிந்திருக்கிறேன். ஆயினும்கூட, அன்புள்ள பிதாவே, நான் தனியாக உணரும்போதும் கூட நீர் என்னோடே இருக்கிறீர். உம்முடைய பிரசன்னம் வெகு தொலைவில் இருப்பதைப் போலத் தெரிந்தாலும் கூட நீர் அருகில் இருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். அன்புள்ள தேவனே, தயவுசெய்து சோதனையின் காலங்களில் நிற்க எனக்கு நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கொடுங்கள், இதனால் உம் வெற்றி வேளைகளில் நானும் பங்கு கொள்ள முடியும். இயேசுவின் நாமத்திலே. ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து