இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கையின் புயல்கள் மற்றும் பயங்கரங்களுக்கு நடுவில், நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்க்கும்படி இயேசுவானவர் நம் அருகில் செல்கிறார். நம்முடைய பயத்தையும் அவர் நமக்கு வேண்டுமென்றும் சொல்லி ஒப்புக்கொடுப்பதினால் , நம்முடைய மோசமான சூழ்நிலைகளில் அவர் நம்முடனே சேரவும், நம்முடைய பிரச்சனைகளில் நமக்கு உதவும்படி அவரிடம் கேட்க வேண்டுமென்று சொல்லி அவர் எப்பொழுதும் காத்திருக்கிறார் . இங்கே இயேசுவின் வார்த்தைகள், "பயப்படாதிருங்கள் ! நான் இருக்கிறேன்." யாத்திராகமம் 3ல் தேவன் தம்மை மோசேக்கு "நான்" என்று வெளிப்படுத்தினார், அவர் இருந்தவர், இருப்பவர் மற்றும் எப்பொழுதும் இருக்கிறவர் . இஸ்ரவேலர்களின் கூக்குரலைக் கேட்டதையும், அவர்களின் கஷ்டங்களைப் பார்த்ததையும், இப்போதும் தேவன் அவர்களுக்கு உதவி செய்ய இறங்கி வருவதையும் மோசேவுக்கு நினைவுபடுத்துவதற்காக, "நானே " என்ற இந்த நாமத்தை தேவனானவர் பயன்படுத்தினார். இயேசுவானவரும் நமக்கும் அவ்வாறே செய்கிறார்" "உடனே அவர் அவர்களோடே பேசி. திடன்கொள்ளுங்கள்,நான் தான், பயப்படாதிருங்கள் என்று சொன்னார் ".

என்னுடைய ஜெபம்

தேவனே , இப்பொழுதும் என்னோடு என் அருகில் இருப்பதற்காக உமக்கு நன்றி — எப்போதும் என் கவலைக்காகவும், பயத்தின் அழுகைக்காகவும் நீர் பதிலளிக்க காத்திருக்கிறீர் . ஆண்டவரே, மகா பெரியவராகிய உம்மை "நான்( பிதா )" என்ற நாமத்தை என் அனுதின வாழ்க்கையில் மிகவும் வருந்தி அழைக்காததற்காக அடியேனை மன்னித்தருளும் . நீர் என் அருகில் எப்பொழுதும் இருப்பதை நான் அறிவேன், எனவே உம்முடைய மாறாத சமூகம் என் ஜீவியத்தில் இருக்கிறது என்பதை மட்டும் தெரியப்படுத்தாமல், என் அனுதின வாழ்க்கையில் உம்மை விளிம்பிற்கு நான் தள்ளும்போது, மெதுவாக என் வாழ்க்கையில் இடைப்படும்படி கேட்டுக்கொள்கிறேன். இவைகளை இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து