இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வாக்குத்தத்தங்கள் உண்மையாய் தொழுது கொள்ளுகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டது ( சங்கீதம் 84 பார்க்க ) இப்படி தொழுதுகொள்ளுகிறவர்கள் தேவசமுகத்தில் இருக்கும் போது சந்தோஷப்படுகிறார்கள் , தேவனை தொழுதுக் கொள்ள இயலாத வேளைகளிலோ ஏங்குகிறார்கள். இவர்கள் தேவனை தனது பெலன் , நம்பிக்கை, ஜெயம் மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக முழுமையாக நம்புகிறார்கள் . உண்மையாய் தொழுது கொள்ளுகிற இவர்களுக்கு தேவனானவர் அநேக வியக்கத்தக்க வாக்குத்தத்தங்களை வைத்திருக்கிறார்! ரோமர் 8 ஆம் அதிகாரம் மற்றும் அதன் வசனம் 28 க்கு ஒத்த மிக பிரத்தியேகமான பகுதி, அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்( ரோமர் 8:32). ஏன் ? தேவன் நமக்காகவே இருக்கிறார். தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, உமக்கு எப்படி நன்றி சொல்லுவேன்? நீர் உம்முடைய கிருபையை இயேசுவுக்குள்ளாய் என்மீது பொழிந்தருளினீர் . நீர் எனக்காக பரலோகத்தையும் ஜெயத்தையும் வாக்களித்திருக்கிறீர். நான் உம்முடைய கிருபைக்காக உம்மை துதிக்கிறேன் . உம்முடைய மகிமையை என்னோடு பகிர்ந்தமைக்காக உமக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன் . நீர் என்னை ஆசீர்வதிக்க ஏங்குகிறீர் என்று அறிவதினால் மகிழ்ந்து களிகூருகிறேன். இப்பொழுதும், அன்புள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்தாவியானவர் மூலமாய் அடியேனை நீர் விரும்புகிற படி உண்மையுள்ளவனாக இருக்க உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து