இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆராந்துமுடியாத உணர்வுகளில் ஒன்று, தேவனுக்கும் நமக்குமான உறவு நித்தியமானது என்பதே . நாம் அவரைத் தேடும்போது, ​​அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார், அவருடைய அன்பிலிருந்து நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று நிச்சியத்திருக்கிறேன் . நாம் மரித்தாலும், "கர்த்தரோடு இருக்கும்படியாய் " செல்கிறோம். நாம் மரணத்தில் நித்திரையாய் இருக்கும்போதும் , ​​நாம் இன்னும் "கர்த்தருக்குள்" இருக்கிறோம். அவர் மகிமையுடன் திரும்பும்போது நாம் "என்றென்றும் கர்த்தருடன் இருப்போம்". கர்த்தராகிய இயேசுவின் மீது நாம் கொண்ட அன்பும், அவர் மூலமாக நாம் தேவனை துதிப்பதும், அந்த அன்பையும், ஸ்தோத்திரங்களையும் நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதை தவிர இந்த பூமியில் உள்ள அனைத்தும் தற்காலிகமானவைகளே ஆகும் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவின் மூலமாய் நாங்கள் வாழ்கிற பூமியை உம்மோடு பிணைத்ததற்கும், என் வாழ்க்கையில் அவருடைய கர்த்தத்துவத்தின் மூலம் அடியேன் இன்னும் கிட்டி சேர உதவியதற்காகவும் உமக்கு மிக்க நன்றி. இன்று அடியேனுடைய முழங்கால்கள் யாவும் முடங்கி தேவனாகிய உம்மை தொழுதுகொள்ளும் போது, ஜீவனுள்ளவர்களும் மரித்தவர்களும் நீர் ஒருவரே மெய்யான தேவன் என்று அங்கீகரிக்கும் அந்த ஒரு நாளுக்காக எதிர்நோக்குகிறேன். அவரைக் கனப்படுத்துவதற்காக இந்த நாளில் வாழ நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் , அன்பான பிதாவாகிய உம்மை நான் அறிவேன், அவரைக் கனப்படுத்துவதன் மூலம் நான் உம்மையும் கனப்படுத்துகிறேன். இயேசுவை நித்திய ஈவாகவும் மற்றும் மாறாத கர்த்தத்துவமாகவும் கொடுத்ததற்காக உம்மை போற்றி துதித்து நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்..

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து