இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தடைகள் மற்றும் சோதனைகள் நிறைந்த உலகில், பரிசுத்தத்தை கடைப்பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. கடினமானதை விட, பரிசுத்தத்துக்கான அழைப்பை அநேக நேரங்களில் நாம் மறந்தும், புறக்கணித்தும் விடுகிறோம் . "விலையில்லா கிருபை " (யூதா 4) உற்சாகமுள்ள வாழ்க்கைக்கான அழைப்புக்கு மாற்றாக உள்ளது. நீதியின் கிரியைக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க விரும்பவில்லை என்றாலும், அசதியாய் அல்லது அர்ப்பணிப்பு இல்லாமை அல்லது எளிமையாய் எதிர்ப்பது இவைகளின் மூலமாய் அசுத்தமானது, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களை கறைப்படுத்துகிறது மற்றும் நாம் ஜீவிக்கிறதான உலகத்திலே நம்முடைய முன்மாதிரியை கெடுக்கிறதாய் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

என்னுடைய ஜெபம்

தேவனே , என் இருதயத்தையும், என் ஜீவனையும் , என் சரீரத்தையும் , என் மாதிரியையும் பரிசுத்தப்படுத்துங்கள் . என் வார்த்தைகளும் என் எண்ணங்களும் உமது சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக . நீர் பரிசுத்தராய் இருப்பதைப் போல அடியேனும் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறேன், நீர் மாத்திரமே கனத்துக்கு தகுதியானவர் என்பதால் உமக்கு மகிமையும் மாட்சிமையையும் கொடுக்க விரும்புகிறேன். நீர் ஒருவரே தேவன் ! இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து