இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய மன்னிப்பு மற்றும் கிருபையின் சூழலில் வாழ வேண்டும். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, ​​அந்த மன்னிப்பின் அடிப்படையானது தேவனானவர் முன்னமே நம்மை மன்னித்திருக்கும் நம்பமுடியாத கடனாகும் (எபேசியர் 4:32-5:1; மத்தேயு 6:14-15, 18:21-35). தேவன் தம்முடைய மன்னிப்பை நாம் நடைமுறையில் வைத்திருப்பதையும் அவற்றை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதையும் பார்க்க விரும்புகிறார். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, ​​தேவன் நமக்குள் அதிக மன்னிப்பையும் அன்பையும் பொழிகிறார் (ரோமர் 5:5). நம்மைத் துன்புறுத்திய மற்றும் காயப்படுத்திய ஒருவரை மன்னிப்பது எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதைவிட தேவனுடைய ஆசீர்வாதங்கள் மிகவும் அதிகமாய் விலையேறப்பெற்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்று இயேசுவானவர் விரும்புகிறார்!

என்னுடைய ஜெபம்

அன்பும்,நீதியுமுள்ள தேவனே , உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவபலியின் மூலமாக என்னைச் சுத்திகரித்து மன்னித்ததற்காக உமக்கு நன்றி. நீர் என்னை மன்னித்தது போல அடியேனும் மற்றவர்களையும் மன்னிக்கும்படி உற்சாகப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. உம்முடைய மக்கள் மன்னிக்கும் குணாதிசயத்தை கொண்டிருக்கும் ஒரு கூட்ட ஜனங்களாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டதற்காக நன்றி. நாங்கள் மற்றவருக்கு மன்னிப்பை வழங்கும்போது அதிலே தாமதமாகவும், விருப்பமில்லாமலும், தயக்கமுடனும் இருந்ததற்காக எங்கள் யாவரையும் மன்னியுங்கள், குறிப்பாக அடியேனை மன்னித்தருளும் . அடியேனை காயப்படுத்திய மக்களை நீர் தயவாய் மன்னித்தருளும் , மேலும் பரிசுத்த ஆவியானவரை கொண்டு என் இருதயத்தை அந்த காயங்களிலிருந்து குணப்படுத்தியருளும் , குறிப்பாக அந்த நபரை உம்முடைய அன்பு மற்றும் கிருபையினால் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களை மன்னிக்கவும் மற்றும் குணப்படுத்தும் வல்லமையையும் எங்களுக்கு தாரும் , இவை யாவற்றையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தின் மூலமாய் கேட்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து