இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் எங்கே இருக்கிறேனோ அங்கு அக்கினி தழலினால் உண்டாகும் வெப்பம் போல இருக்கிறது. குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் எதுவும் மிகவும் அற்புதமாகத் தெரிகிறது. நீங்கள் எப்போதாவது அறுவடை செய்து, தூசி, செடித் துண்டுகள் மற்றும் உங்கள் சட்டையின் கீழ் வியர்வையைப் பெற்றிருந்தால், உங்கள் வறண்ட தொண்டைக்கு குளிர்ச்சியான தண்ணீர் எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் உங்கள் ஒட்டும் உடலுக்கு குளிர்ந்த மழை எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் . ஆனால் நாம் ஒருவருக்கொருவர் மற்றும் அவருக்காக நம்பகமான ஊழியர்களாக இருக்கும்போது, ​​சூடான, சோர்வான நாளில் குளிர் பானத்தை விட சிறந்த புத்துணர்ச்சி என்று தேவன் அவற்றை கூறுகிறார். சமீப காலமாக நம் பரலோகத்தின் எஜமானரின் சுவிசேஷத்தைக் குறித்து நீங்கள் என்னச் செய்தீர்கள்? அவருடைய அன்பைப் பகிர்ந்துகொள்வதில், அவருடைய கிருபையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் அல்லது அவருடைய தயவை வெளிப்படுத்துவதில் நீங்கள் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்கள்? நம் ஆண்டவரும் எஜமானருமானவருடன் அறுவடைக் காலத்தில் பனியின் குளிர்ச்சியில் ஈடுபடுவோம், அவருடைய அன்பையும் கிருபையையும் பற்றிய நற்செய்தியுடன் மற்றவர்களை ஆசீர்வதிப்போம்!

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே , உமது நற்செய்தியை நான் நம்பத் தகுதியற்றவனாக இருக்கும்போது, ​​உம்மிடம் என் விசுவாசத்தைக் காட்ட வெட்கப்படும்போது அல்லது உமது நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் உற்சாகமில்லாமல் இருந்த வேளைகளுக்காக என்னை மன்னியுங்கள். என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு உமது அன்பு, கிருபை , தயவு மற்றும் நற்பண்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும், அறிவிக்கவும் எனக்கு தைரியத்தையும் ஞானத்தையும் தாரும் . இன்று என் வார்த்தைகளும், கிரியைகளும் உமக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வரட்டும் ! இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து