இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கோடையின் கடுமையான வெப்பத்தின் முடிவில், உங்கள் பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சியின் நிழலை எங்கே கண்டீர்கள்? நாம் உன்னதமான தேவனின் பராமரிப்பில் நம் வாழ்க்கையை வைக்கும்போது, ​​அவருடைய பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சியின் நிழல் நம்மை மறைத்துக் கொள்வதை காண்கிறோம்.கடினமான காலங்களிலும் , சாத்தானின் மிக மோசமான தாக்குதலிலும் இருந்து அவர் நம்மைப் பாதுகாக்கிறார் என்பதையும், அவருடைய சமூகம் நமக்கு பெலன் கொடுக்கிறது என்பதையும் நாம் பார்க்க முடியாவிட்டாலும் கூட, அவைகளின் மேல் எப்போதும் நம்பிக்கை கொள்ள முடியும் .

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, , உம் பிரசன்னதிற்க்கான எந்த ஆதாரத்தையும் என்னால் பார்க்க முடியாதபோதும் நீர் அங்கு இருக்கிறீர்கள் என்று நம்புவதற்கு இதயத்தையும், பார்ப்பதற்கு எனக்கு கண்களையும் கொடுங்கள். தாக்குதலின் வேளைகளில் பாதுகாவலருமாய் , ஆத்துமா விடாய்த்த நேரங்களில் புத்துணர்ச்சியுமாய் இரும். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change