இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களுக்கு பயிற்சிஅளிக்க வேண்டும். வாழ்க்கை என்பது அறிவு சார்ந்த பாடங்கள் மற்றும் தகவல்களுக்கு மட்டும் அல்ல. இது நம் அனுதின வாழ்க்கைக்குள் சத்தியத்தை ஒருங்கிணைப்பதாகும். நம் பிள்ளைகளையும் அவர்களின் பயிற்சியையும் நமது முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க தேவன் நம்மை அழைக்கிறார், ஏனென்றால் நம் பிள்ளைகள் என்றென்றும் அதை விடாதிருப்பார்கள், அதே நேரத்தில் நாம் நேரத்தைச் செலவிடும் மற்ற விஷயங்கள் அநித்யமானவைகள் .

என்னுடைய ஜெபம்

மகா பரிசுத்தமான ஆலோசகரே, உம் அன்பையும், உம் சத்தியத்தையும் எனது பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முற்படும்போது , அடியேன் அவர்களுக்கு போதிக்க வேண்டிய சிறந்த காரியத்திலே எனக்கு உதவியருளும் . என்னை காட்டிலும் அவர்கள் உம்மை முழுமையாக அறிந்து நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஞானமுள்ள முடிவுகளை எடுக்கவும், சமாதானத்தை என் குடும்ப வாழ்க்கையில் செயல்படுத்தவும் எனக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து