இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோபு ஏன் துன்பப்பட்டார் என்பதை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய குமாரனுக்கு முன்பாக அவர் இப்பிரபஞ்சத்தில் தனது இடத்தைக் கற்றுக்கொண்டார் (யோபு அதிகாரம் 38-41). இந்த முதிர்ந்த பார்வை நம் ஒவ்வொருவருக்கும் தேவை! நாம் இளமையாக இருக்கும்போது, ​​காலம் மிக மெதுவாகக் கடந்து செல்வதாகத் தோன்றுகிறது - குறிப்பாக ஏதாவது விசேஷத்திற்காக உற்சாகமாக காத்திருக்கும் போது அப்படியாய் தோன்றுகிறது ! ஆனால் நமக்கு வயதாகும்போது, ​​ஆண்டுகள் வேகமாகப் பறந்துவிடுகின்றன. நாம் கற்றுகொண்டவைகளும், அனுபவங்களைப் பொருட்படுத்தாமல், காலப்போக்கில் நாம் இருக்கும் நிலைமையை பற்றிய தாழ்மை நம்மை இரண்டு பெரிய விழிப்புணர்வுகளுக்கு வழிநடத்தி செல்லுகிறது : ......................... 1.தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் ஒப்பிடும்போது நமது தனிப்பட்ட அறிவு மிகவும் கொஞ்சம் . 2.இந்த உலகம் உண்டானது முதல் உள்ள காலத்தை ஒப்பிடும்போது நாம் இவ்வுலகில் உள்ள நாட்கள் மிகவும் குறைவு. .............. இந்த புரிந்துக்கொள்ளுதல் , நம் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தேவனிடம் திருப்புவதற்கு நம்மைத் தயார்படுத்த வேண்டும், அவர் நம்மைத் தன்னிடம் கொண்டு வரவும், நித்தியத்தின் பெரும் பகுதியை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார். நாம் ஒரு நிழலாக இருக்கலாம், ஆனால் தேவனானவர் நம்மையும் அவருடைய பிள்ளையென அழைக்கிறார் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , என் அப்பா பிதாவே , உம்முடைய மகத்துவத்தையும் பெருமையையும் புரிந்துகொள்வதற்கான அதிக ஞானமில்லாத என்னுடன் உம்முடைய அன்பை என்னைப் போன்றவர்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கும்போது உம் மிகுந்த பொறுமைக்காக நன்றி. தயவு செய்து நான் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க எனக்கு ஞானத்தை தாரும் , என்னுடைய வழியை அல்ல, உம் வழியைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவியருளும் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து