இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கான விஷயங்களைச் சரிசெய்துக் கொள்ள நாம் எவ்வளவு அதிகமாக முயற்சி செய்கிறோம் - "முதல் தரத்தில் உள்ளவைகளை தேடுவதில்" அதிக கவனம் செலுத்துகிறோம் - மேலும் வாழ்க்கையை மேன்மையுள்ளதாக மாற்றும் அர்த்தமுள்ள உறவுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம் என்பது ஆச்சரியமாக இல்லையா? ' உனக்கு நண்பர்கள் வேண்டுமென்றால் முதலாவது நீ நண்பனாக இரு" இப்படியாக பழமொழி இருக்கிறது . உனக்கு என்னவென்று தெரியுமா? அந்த பழமொழி சரியே! யாவரும் தங்களுக்கு விருப்பமானதை மட்டுமே தேட முற்படுகிறார்கள் - பெரும்பாலான மக்கள் செய்வது இதுதான். கிறிஸ்தவர்கள் மீட்புக்குரிய வழியைக் காட்டுவது என்பது , அவர்களுடைய ஆவிக்குரிய பிதாவாகிய தேவனுடைய குணாதிசயங்களை பெற்றுக்கொள்ளவதாகும் , தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் குறித்து சிந்திக்க அவர்கள் தயாராக இருப்பது இது தான்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னை மன்னியுங்கள், ஏனென்றால் நான் அடிக்கடி சுயபிரயோஜனத்தை மற்றும் மற்றவர்களின் தேவைகளின் அடிப்படையில் நான் எடுக்கும் முடிவுகளின் தாக்கங்களை குறித்து அரிதாகவே சிந்திக்கிறேன் என்பதை நான் அறிவேன். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே அடியேனும் கொண்டிருக்க விரும்புகிறேன், மேலும் உம்முடைய கிருபை தேவைப்படும் அனைவருடனும் தன்னலமற்ற மற்றும் தியாக மனப்பான்மையுடன் இருக்க விரும்புகிறேன் (பிலிப்பியர் 2:4-8). என் வாழ்க்கையின் இந்த வசனத்தில் குறிப்பிட்ட பிரகாரமாய் அடியேனும் உம் குமாரனை போல இருக்க முயலும் போது தயவுக்கூர்ந்து என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து