இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் துன்பத்தின் நடுவில் இருக்கும் போது அல்லது முதிர் வயதில் இருக்கும் போதும் தேவன் நம்மை மறப்பதில்லை . நாம் நம் நண்பர்களை விட அதிகமான நாட்கள் வாழலாம், நம்மை அறிந்தவர்களால் நாம் மறக்கப்படலாம், ஆனால் தேவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதுமில்லை அல்லது நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதுமில்லை . அவர் நம்மை ஏந்துவார் , சுமப்பார், பாதுகாப்பார் மற்றும் இரட்சிப்பார்.

என்னுடைய ஜெபம்

என் அன்பின் பிதாவே , என்னை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. உம் முதிர்வயது பிள்ளைகளிடத்தில் நீர் உண்மையாக இருந்ததினால், என்னை விட்டு நீர் விலக மாட்டேன் என்ற உம் வாக்குறுதியை என்னால் நம்ப முடியும் என்று எனக்குத் தெரியும். நான் எங்கிருந்தாலும், எங்கு சென்றாலும், நீர் என்னோடே இருப்பீர் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து