இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் "திருச்சபைக்கு " தவறாமல் செல்கிறீர்களா? முடியாது என நினைக்கிறேன்! என்னை தவறாக எண்ணாதேயுங்கள் ; இந்த ஞாயிற்றுக்கிழமை தொழுகைக்கு மற்றும் ஐக்கிய கூட்டத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கவில்லை! விசுவாசிகளாக நாம் சபையாக ஒன்று கூடுவதை கைவிட வேண்டாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது (எபிரெயர் 10:25). ஆனால் நாம் விசுவாசிகளாக ஐக்கியத்திற்காக கூடும் போது, ​​ஊக்குவிப்பதற்காகவும், தேவனுடைய வார்த்தையை சிந்திப்பதற்காகவும் ஒன்று கூடுவோம் (1 கொரிந்தியர் 14). நாம் சபைக்கு செல்லவில்லை; நாமே அவ்வாலயமாய் இருக்கிறோம் ! (புதிய ஏற்பாட்டில் சபை என்ற வார்த்தையை ஒரு கட்டிடத்தைக் குறிக்க ஒருபோதும் பயன்படுத்தவில்லை!) பழைய ஏற்பாட்டு காலங்களில் தேவனானவர் தம் மக்களை எச்சரித்தார், வெறுமனே வழிபாட்டுத் ஸ்தலங்களுக்குச் செல்வது பயனற்றது. பெத்தேல், கில்கால், பெயெர்செபா போன்ற இந்தப் புனித இடங்களை அவர்கள் எவ்வளவு மதிப்பிட்டார்களோ, அதற்கு மேலாக அவர்கள் மெய்யான வாழ்க்கையைக் கண்டுபிடிக்க பரலோகத்தின் தேவனை தேட வேண்டியது மிகவும் அவசியமானது ! அதைத்தான் தேவனானவர் நாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என நான் நம்புகிறேன். நாம் ஒன்றாக இணைந்து அவரைத் தேடும்போது, ​​நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாய் இருந்து , ஆறுதல் மற்றும் ஊக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். நாம் அவ்வாறு செய்யும்போது, ​​அவருடனான வாழ்க்கையைக் கண்டுபிடிப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த பிதாவே , இந்த வாரத்தில் வரும் போராட்டங்களை நான் எதிர்கொள்ளும்போது, ​​உம்முடைய மாறாத அன்பான பிரசன்னத்திலிருந்து நான் ஒருபோதும் விலகியிருக்கவில்லை என்பதை அறிவது மிகவும் ஆறுதல் அளிக்கிறது . உம்முடைய சமூகத்திலே மற்ற விசுவாசிகளுடன் நான் சந்திக்கும் அந்த நேரங்களை நான் விரும்புகிறேன், மேலும் எங்கள் தொழுகையானது பெலனுள்ளதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது. நாங்கள் ஒன்று கூடும் போது நீர் எப்பொழுதும் எங்களுடன் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும், ஆகிலும் சில நேரங்களில் என் இருதயம், வாழ்க்கையின் சூழ்நிலைகள் மற்றும் உறவிலுள்ள சிக்கல்கள் உம் சமூகத்தை பற்றிய எனது விழிப்புணர்வைத் தடம் புரளச் செய்கின்றன. . இந்த வாரம், அன்பான பிதாவே , எங்கள் எல்லா ஐக்கிய கூட்டம் மிகவும் துடிப்பாகவும் பெலன் கொடுக்கத்தக்கதாய் இருக்க ஜெபிக்கிறேன். உம்முடைய சமூகம் எப்பொழுதும் என் அருகாமையில் இருக்க நான் ஜெபிக்கிறேன். ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், நாங்கள் யாவரும் உம்மை துதித்து போற்றி செய்யும் செயல்களால் நீர் மகிமைப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இந்த நன்னாளிலே நாங்கள் உம்முடன் நெருங்கி வர உதவியருளும் . இவை யாவையும் இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து