இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவரின் உரையாடலின் இலக்கு தெளிவான வார்த்தைகள் மாத்திரமல்ல . கேட்பவர்கள் புரிந்து கொள்வது மாத்திரம் நம் இலக்கும் இல்லை. நம் உரையாடல் உண்மையாக இருப்பது மாத்திரம் நம் குறிக்கோள் அல்ல. எனது வார்த்தைகளைக் கேட்கும் நபருக்கு உதவிகரமாக பொருத்தமானதாகவும், ஊக்கமளிக்கும் வகையில் மேம்படுத்துவதாகவும், நன்மையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும் .

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள நல்ல மேய்ப்பரே, நான் பரிசுத்தமுள்ள இருதயத்தைப் பெற விரும்புகிறேன். என் வார்த்தைகள் உண்மையிலேயே நன்மை பயக்கும் மற்றும் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி இருக்க வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். உம்முடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொண்டு வரும் வகையில் எனது வார்த்தைகளை பிறப்பிக்கும் கனிவான இருதயத்தை அடியேன் வளர்த்துக் கொள்ள முயலும்போது தயவுக்கூர்ந்து எனக்கு உதவியருளும் . என் பாதையில் நீர் கொண்டுவரும் மக்களுக்கு உமது கிருபையை பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்ச்சியுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்ள நான் ஏங்குகிறேன். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து