இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எங்களுக்கு தேவையான கிருபைக்கு நாங்கள் எவ்வளவேணும் தகுதியானவர்கள் அல்ல . தேவனுடைய மன்னிப்பை பெற கற்பனை செய்யக் கூட நமக்கு உரிமை இல்லை. ஆவிக்குரிய மீட்பை எதிர்பார்க்க நமக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் இயேசுவுக்குள்ளாய் , தேவன் ... இந்த வார்த்தை உங்களுக்கு பிடிக்கவில்லையா? ஆனால் இயேசுவுக்குள்ளாய், தேவன் தமது ஆச்சரியமான அன்பையும், கிருபையையும், இரக்கத்தையும், மீட்பையும் நமக்குக் கொடுக்கிறார். அவருடைய மன்னிப்பு, விடுதலை மற்றும் புதிய வாழ்க்கையை பெற அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் நாம் நம்பிக்கையுடன் கேட்கலாம் - நாம் அதற்குத் தகுதியானவர் என்பதால் அல்ல, தேவன் யார் என்பதாலும், அவர் நம்மீது கொண்டுள்ள மிகுந்த அன்பினாலும் அவரை நாம் நம்பிக்கையுடன் அழைக்கலாம் . தேவனின் கிருபையும் மன்னிப்பும் நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவது மாத்திரமல்ல , அவருடைய மாட்சிமையான நாமத்தை மகிமைப்படுத்துவது ஆகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், அற்புதமுமான தேவனே , எனக்கு உம்முடைய கிருபையையும் மன்னிப்பையும் தந்தருளும் . சோதனைகாரனின் கண்ணியிலிருந்து எனக்கு உம்முடைய விடுதலையை தந்தருளும். உமது வல்லமையும் கிருபையும் இல்லாவிட்டால் நான் தோல்வியடைவேன். நீர் எனக்கு அளிக்கும் கிருபையும் , என் மூலம் நீர் வெளிப்படுத்தும் வல்லமையும் உமக்குத் துதியைக் கொண்டு வரட்டும். உம் அன்பையும் கிருபையையும் மற்றவர்கள் அறிந்திருப்பதால், நீர் என்மீது பொழியும் மன்னிப்பு உமக்கு கனத்தைக் கொண்டு வரட்டும். சோதனைகாரனின் கண்ணியிலிருந்து என்னை விடுவிப்பது உமது நாமத்துக்கு மகிமையை சேர்க்கட்டும்.என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து