இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் ? உங்கள் தனிப்பட்ட பெருமைக்கு எது ஆதாரம்? உங்கள் சாதனைகள், உங்கள் ஐசுவரியம் , உங்கள் அந்தஸ்து, உங்கள் தோற்றம், உங்கள் பக்தி, உங்கள் பணிவு, உங்கள்...? "இயேசுவின் சிலுவையின் நிழலில் அனுதினம் " என்ற பழைய பாடலில், "என் மகிமை அதுவே , அவருடைய அருகில் ஆறுதல் அடைகிறேன் " என்று நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறோம். நாம் "அவருடைய பரிசுத்த நாமத்தில் மகிமைப்படுவோம்" என்று ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் கூறுகிறார்கள். தேவனுடைய பரிசுத்த நாமத்தை குறித்து நமது முழு புரிதல் இயேசுவின் மூலமாய் ஆச்சரியப்படும் அளவில் நமக்கு விவரித்து காண்பிக்கப்படுகிறது . தேவனின் நாமத்தை தொழுதுக்கொள்ளவது மாத்திரமல்ல , அவரை "அப்பா பிதாவே " என்று அழைக்கவும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். மகிழ்ச்சிக்கான வேறு எந்த காரணமும், பெருமை பேசுவதற்கான மற்ற எந்த அடிப்படையும் இல்லை.அவை யாவும் வெறும் மாயையும் கடந்து போகிறதுமாய் இருக்கிறது . தேவனை தேடும் இருதயம் உள்ளவர்களுக்கு, தம் நேசக் குமாரனை கொடுத்த பிதாவின் பரிசுத்த நாமத்தில் போற்றுவதில் மகிமை காணப்படுகிறது. அவர் நம்மை அந்த அளவுக்கு அதிகமாய் நேசிக்கிறார்: நாம் ஒரு நாள் அவருடைய மகிமையிலே பங்குகொள்வோம். (கொலோசெயர் 3:1-4). எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது !

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நீர் அடியேனை அநேக வழிகளில் ஆசீர்வதித்துள்ளீர்கள். அதற்காக நான் உமக்கு எப்படி சரியாக நன்றி சொல்ல ஆரம்பிக்க முடியும்? நான் அநேக சமயங்களில் இப்படிப்பட்ட இழிவான மற்றும் மாயை என்றும் அறிந்தும் , பெரும்பாலும் என்னிடமிருந்து எதையாவது விரும்புபவர்களின் தவறான முகஸ்துதி மட்டுமே அவைகள் என்று நான் அறிந்திருந்தாலும், நான் சில சமயங்களில் அப்படிப்பட்ட பெயரையும் புகழையும் தேடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் இருதயத்தின் ஆழத்திலே , அன்பான தேவனே , உம் கிருபையினால் நீர் கையெழுத்திட்ட புத்திரசுவிகார உடன்படிக்கையில் எனது மெய்யான மகிமை வேரூன்றியுள்ளது என்பதை நான் அறிவேன். நன்றி! வார்த்தைகளால் என் பாராட்டை விவரிக்க முடியாது, ஆனால் நீர் செய்த அனைத்திற்காகவும் உம் சமூகத்திலே நித்தியமாக நன்றியுடன் இருப்பதற்காக நான் காத்திருக்கிறேன். பரலோகத்திலும், பூமியிலும், என் வாழ்விலும், இப்போதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் எல்லா மகிமையும் கனமும் புகழ்ச்சியும் உண்டாகட்டும். இயேசுவின் நாமத்தினாலே , அடியேன் உம்மை போற்றி நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து