இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"அவரை பரிசுத்த அலங்காரத்துடனே" என்ற சொற்றொடரை நீங்கள் போற்ற வேண்டாமா! அந்தச் மகிமையின் அலங்காரத்தை காண நீங்கள் ஏங்கவில்லையா? இது ஏசாயா 6 ஆம் அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடன் சந்திப்பதை நினைப்பூட்டுகிறது அல்லது வெளிப்படுத்துதல் 1ஆம் அதிகாரத்தில் யோவான் இயேசுவை குறித்த தரிசனத்தை நினைப்பூட்டுகிறது. தேவனின் சாராம்சம் - பழைய ஏற்பாட்டில் அவரது பரிசுத்தமான மற்றும் கம்பீரமான மகிமை என்று அறியப்படுகிறது - அதை அற்புதமானதாக மட்டுமே விவரிக்க முடியும்! ஏசாயா 6ஆம் அதிகாரத்தில் தூதர்கள் மற்றும் வெளிப்படுத்தலில் சிங்காசனத்தைச் சுற்றியுள்ள இருபத்து-நான்கு மூப்பர்களுடன் இணைவதே நமது பொருத்தமான பதிலாகும் (வெளிப்படுத்துதல் 7:9-11, தேவனை வணங்கி, "ஏசாயா-Isaiah :6:3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்". பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்பியுள்ளது. ஆகையால் "பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்;".

என்னுடைய ஜெபம்

தேவனே , என் மனத்தால் புரிந்துகொள்ளவோ ​​கற்பனை செய்யவோ முடியாத அளவுக்கு நீ பரிசுத்தமாகவும் கம்பீரமாகவும் இருக்கிறீர் . உமது மகிமை, வல்லமை, கிருபை மற்றும் இரக்கத்திற்காக நான் உம்மை போற்றுகிறேன் , துதிக்கிறேன். உமது மகத்துவத்தை நேருக்கு நேர் பார்த்து, பரலோகத்தின் தூதர்களையும் இருபத்து நான்கு மூப்பர்களையும் ஒருசேர முடிவற்ற துதி ஸ்தோத்திரத்தில் சேரும் நாளுக்காக நான் ஆவலாக இருக்கிறேன். இயேசுவின் மூலமாக , நான் என் வாழ்க்கையை ஒப்புவித்து இந்த துதியை ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து