இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மை அடிமைத்தனத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், தம்மை நம்பியவர்களுக்கு அவர் அடைக்கலமாயிருக்கிறார் என்றும் உறுதியளிக்கிறார். நம் தேவைகளை சந்திப்பதும் பாதுகாப்பதும் நமது பலத்தினாலல்ல, ஏனெனில் நமது எதிர்காலம் அவருடன் பிணைக்கப்பட்டுள்ளது

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, வானத்துக்கும் பூமிக்கும் தேவனே, என்னுடைய வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கிறேன். உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்போது மற்றவர்களை ஆசீர்வதிக்க அடியேனை உபயோகப்படுத்தும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து