இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்பதை பரிசுத்த வேதாகமம் மீண்டும் மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறது (எபேசியர் 6:10-12). தீமையான எல்லா காரியங்களிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். பிசாசுக்கும் அவனுடைய கிரியைகளுக்கும் சம்பந்தமான எதிலும் நாம் ஈடுபடக்கூடாது. நம்முடைய கர்த்தரானவர் இவ்வுலகத்தின் அதிபதியாகிய பிசாசானவனை விடவும் அவனுடைய எல்லா பொல்லாத தூதர்களை விடவும் மகா பெரியவர் என்பதையும் நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் உண்மையுள்ளவர். அவர் நம்மை நம்முடைய சத்ருக்களின் கைகளில் விட்டுவிடமாட்டார். நாம் அவரை நெருங்கி, அவருடைய வல்லமையை நமக்காக பயன்படுத்த நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்போமானால் , தேவன் நம்மைப் பெலப்படுத்தி, சாத்தானின் எல்லா தாக்குதலிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பார் (யாக்கோபு 4:7-10). முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய யோவான் நினைப்பூட்டிய வாக்குறுதியை நாம் கைக்கொள்ள வேண்டும்: பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் . ( 1 யோவான்-1 John -4:4 )

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, உமது குமாரனின் தியாகம், அவருடைய சிலுவை மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் சாத்தானின் மீது எனக்கு ஜெயத்தை கொடுத்ததற்காக உமக்கு நன்றி. அவர் மறுபடியுமாய் திரும்பி வந்து அடியேனை உம் நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். சோதனையை முறியடிக்கவும், பிசாசானவனின் வஞ்சகங்களை எதிர்க்கவும் என்னைப் பெலப்படுத்தி,அவைகளை மேற்கொள்ள எனக்கு அதிகாரத்தை தாரும் . ஆண்டவரே, நான் உம்மை மாத்திரமே துதிக்கவும் , உம் ஒருவருக்கே ஊழியஞ் செய்யவும், முற்றிலுமாய் கீழ்ப்படியவும் விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே என்றென்றும் எல்லா மகிமையும் கனமும் உமக்கே செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து