இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார்! அறுவைசிகிச்சையிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு என்னவென்றால் அந்த நபருக்காக மற்றவர்கள் ஜெபம் செய்தபோது அவர்கள் குணமடைந்தார்கள் , இந்த உண்மையை இவை உறுதிப்படுத்துகிறது. அது உண்மை என்று எங்கள் அனுபவம் தெரிவிக்கிறது. அது அப்படித்தான் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. லூக்கா ஆசிரியர் ஜெபத்திற்கு ஒரு துல்லியமான பதிலை வலியுறுத்துகிறார் அதாவது தேவனை தேடுபவர்கள்- பெற்றுக்கொள்ளுகிறார்கள் . தேவன் நமக்கு உண்மையிலேயே அதிசயமான மற்றும் அற்புதமான ஈவை கொடுக்க விரும்புகிறார்: அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் நம்மில் வாசம் செய்கிறார் (லூக்கா 11:13). நமக்குள்ளே வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் காரணமாக, நாம் நினைக்கிறதற்கும் அல்லது வேண்டிகிக்கொள்வதை விட, தேவன் தம்முடைய வல்லமையை கொண்டு நமக்கு மிகவும் அதிகமாகச் செய்ய முடியும் (எபேசியர் 3:20-21).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என் பாவங்களுக்காக உமது குமாரனின் சிலுவை மரணம் ஒரு நம்பமுடியாத ஈவு. அவைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாததை விட இயேசுவின் மூலமாக கொடுக்கப்பட்ட இரட்சிப்பின் ஆசீர்வாதம் மிகவும் அற்புதமானது. பரிசுத்த ஆவியின் மூலமாக எனக்குள்ளே உம் கிருபையின் பிரசன்னத்தை ஈவாக பெற்றதினால் ஆறுதலும், பெலனும் உண்டாகிறது . நாங்கள் உம்மைத் தேடும் போது, ​​எங்களால் எண்ணி பார்க்க முடியாத காரியங்களையும் தாண்டி என்னை ஆசீர்வதிக்க நீர் விருப்பமாக இருக்கிறீர் என்ற உம் வாக்குறுதிக்காக நன்றி, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து