இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவரின் உயிர்த்தெழுதல் ஒரு ஆரம்பம்தான்! அவருடைய உயிர்த்தெழுதலின் அர்த்தம்,அவர்மீது விசுவாசம் கொண்டுள்ளவர்கள், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய பிதாவின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் , அவருக்கு சொந்தமானவர்கள், என்றும் அவரை உறுதியாய் நம்புகிறவர்கள், யாவரும் ஜீவனுள்ளவர்களானாலும் அல்லது மரித்தவர்களானாலும இயேசுவின் வருகையின் போது, அவர் ​​மரணத்தை மேற்கொண்டு பெற்ற ஜெயத்திலே பங்கடைவோம் என்ற நம்பிக்கையோடே இருக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தில் வீற்றிருக்கிற அன்புள்ள பிதாவே, இயேசுவுக்குள்ளாய் பாவத்தினின்றும் , மரணத்தினின்றும் அடியேனை வெற்றிசிறக்க செய்ததற்காக உமக்கு நன்றி. நீர் எப்படி இயேசுவை மரணத்தினின்று உயிர்தெழச்செய்தீரோ, அப்படியே அவர் மறுபடியும் வருகிறதான அந்த மாபெரிதான நாளின்போது என்னையும் அப்படி உயிர்தெழச் செய்வீர் என்று அறிவேன். அந்த உயிர்தெழுதலின் வல்லமையினாலே இன்றைய நாளளவும் அடியேன் ஜெயமுள்ளவனாய் வாழ உதவியருளும். இயேசுவின் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறோம். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து