இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று என்ன நடக்கிறது என்பதில் நாம் எப்படி நம்பிக்கையுடன் இருக்கலாம்? நாளையத்தினத்தை குறித்து நமது நம்பிக்கை என்ன? இன்று என்ன நடக்கிறது என்பதில் நாம் எப்படி நம்பிக்கையுடன் இருக்கலாம்? நாளையதினத்திற்கான நமது உத்தரவாதம் என்ன? நித்தியத்தைப் பற்றிய உற்சாகத்தை நாம் எங்கே பெற்றுக்கொள்வது? கர்த்தர் எனக்குச் சகாயர்! பயம் நம்முடைய எஜமானன் அல்ல ஏனென்றால் நம்முடைய எதிர்காலம், நம்முடைய முடிவு, நம்முடைய நித்தியஜீவன் ஆகிய இவைகளெல்லாம் நித்ய பிதாவின் கரங்களில் உள்ளது. மனுஷன் செய்யக்கூடிய மிக மோசமான காரியம்அல்லது செயல் என்னவென்றால் காலத்திற்கு முன்னமே என்னை தேவனுடைய வீட்டிற்கு அனுப்புவதே ஆகும்.

என்னுடைய ஜெபம்

என்னுடைய பிதாவும், சகாயருமாகிய, சர்வவல்லமையுள்ள தேவனே, என்னுடைய நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன். என்னுடைய எல்லா நாளையத்தினத்தை குறித்ததான காரியங்களிலும் அல்பாவும், ஒமேகாவுமாகிய உம்மிலே நம்பிக்கையாய் இருக்கிறேன். இன்றைக்கான காரியங்களுக்காகவும் உம்மை சார்ந்து நம்பிக்கையாய் இருக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே உம்மை துதிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து