இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்முடைய குணாதிசயமும், விருப்பமும் தம்முடையதை போலவே இருக்க வேண்டுமென்று நம்மில் கிரியை செய்கிறார். தேவன் கொடுக்கிறவராய் இருக்கிறார்.உதாரத்துவமாய் நம்மை ஆசீர்வதிப்பதில் தேவன் மகிழ்ச்சி அடைகிறார். இப்பொழுது நம்மையும் அவ்வண்ணமாகவே செய்யும்படி கேட்கிறார். நம்முடைய சபைகளையும், ஊழியங்களையும் தாங்குவதற்காக காணிக்கை கொடுப்பது ஒரு தனிச்சையான செயல் அல்ல ; கொடுப்பது என்பது நம்முடைய குணாதிசயத்திலே மறுரூபமாகி தேவனை போல இருப்பதாகும். தேவனுடைய கிருபையுள்ள கிரியைகளின் மீது நம்முடைய விசுவாசம், நம்பிக்கை மற்றும் முன்னுரிமைகளை நாம் வைத்திருக்கும் உண்மையான வழிகளில் ஒன்றாக இது இருக்கலாம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நீர் என்னுடனே பகிர்ந்து கொண்ட எண்ணி முடியாத நன்மையின் காரியங்களில் அடியேன் உதாரத்துவமாய் இல்லாமலிருந்தமைக்காக அடியேனை மன்னித்தருளும். அடியேனை உம்முடைய ஆசீர்வாதத்தின் வழியாய் இருக்க செய்தருளும். என்னிடம் இருப்பதெல்லாம் உம்முடையது என்று எனக்குத் நன்றாய் தெரியும். நீர் பயன்படுத்துவது போல அடியேனும் உபயோகிக்க உதவியருளும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து