இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்க்கை ஆசீர்வாதமானது ! அந்த ஆசீர்வாதத்தைப் பகிர்ந்துகொள்ள புதிய கிறிஸ்தவர்களை நம் ஐக்கியத்திற்க்குள் வரவேற்க வேண்டும் .அவர்களின் கடந்த கால தோல்விகளையோ அல்லது தற்போதைய போராட்டங்களையோ ஆராய்வதற்காக நாம் அவர்களை அழைத்து வரக் கூடாது , மாறாக அவர்களை தேவனுடைய குடும்பத்தின் அன்பிற்குள் கொண்டு வர வேண்டும் . தேவன் நம்மை அன்புடனும், கிருபையுடனும் வரவேற்றார். புதிதாக வரும் கிறிஸ்தவர்களிடம் அவ்வாறே செய்வோமாக.

என்னுடைய ஜெபம்

பிதாவே , கிறிஸ்துவுக்குள்ளான என் சகோதர சகோதரிகளுடன், குறிப்பாக புதிதாக வரும் கிறிஸ்தவர்களுடன் அதிக புரிதலுடனும் பொறுமையாகவும் இருக்க தயவுச் செய்து உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து