இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகத்தினாலுண்டானவைகள் எப்பொழுதுமே , அழிந்துபோகக்கூடியவை , அவைகளின் மீது அன்பு கூரும் போது, அவை நிச்சயமாக நம்மை பிரச்சனைக்குட்படுத்தும் . இன்னும் மோசமாக, அவை நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் அல்லது நம் இருதயத்தில் உள்ள வெறுமையான இடங்களை நிரப்பும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கலாம். ஆனால் மெய்யாகவே நம் அப்பா பிதாவில் நம் நம்பிக்கைகளையும், நினைவுகளையும் உட்படுத்திக்கொண்டால் , நாம் நித்தியத்துடன் இணைந்திருப்போம், மேலும் நமக்கு மிகவும் தேவையானது எப்போதும் நம்முடன் நிலைத்திருக்கும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, உமக்கும் உமக்கடுத்த காரியங்களிலும் எங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்க எங்களுக்கு ஞானத்தை தந்தருளும் .எனது கண்களும் இருதயமும் அழிந்து போகக்கூடிய பளபளப்பான பொருட்களால் அடிக்கடி திசைதிருப்பப்படுகின்றன என்பதை நான் உம்மிடம் ஒப்புக்கொள்கிறேன். உமது பரிசுத்த ஆவியினால் , பிதாவே , உமக்காக வாஞ்சிக்க என் இருதயத்தைத் ஏவியருளும் . இயேசுவின் விலையேறப் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து