இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்றவர்களை நியாயந்தீர்ப்பது மிகவும் எளிதானது .அவர்களின் போராட்டம் நாம் அறியாதவை .அவர்களுடைய சூழ்நிலை நமக்குத் தெரியாது.எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுடைய இருதயம் நமக்கு புரியாது . நாம் குற்றவாளிகளென்று நியாயந் தீர்க்கிறவர்களாயிருக்கும் போது, மற்றவர்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்குகிறோம் . நாம் தொடர்ந்து புறங்கூறுதலின் மூலம் அந்த தீர்ப்பின் உணர்வை மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.அவர்களை குற்றவாளிகளாக தீர்க்கும் மனப்பான்மையுடன் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நமது பிடிவாத குணம் ஒரு தடையையும், வீழ்ந்து போகக்கூடிய தடைகற்களையும் ஏற்படுத்துகிறது, அது அவர்களை சோர்ந்துபோகவும், வீழ்ந்துவிடவும் செய்கிறதாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

பிதாவே , மற்றவர்களிடம் என்னுடைய அணுகுமுறையின் இணக்கமானது நீர் அவர்களுக்காக வைத்திருக்கிற மீட்பின் கிருபைக்கு ஒத்திருக்க வேண்டுமென்று கேட்கிறேன். என்னுடைய பெலவீனங்களில் நீர் பொறுமையாக இருப்பது போல நானும் மற்றவருடைய பெலவீனங்களில் பொறுமையாக இருக்க விரும்புகிறேன். பெலவீனரையும், பாடுபடுகிறவர்களையும் அதிகமாய் உற்சாகபடுத்தாமல் இருந்தமைக்காக என்னை மன்னியும். இன்னுமாய் தேவன் அவர்களை ஆசீர்வதிக்க அடியேன் ஒரு வழியாய் இருக்கவும் அந்த பாதையை பார்க்கும்படி என் கண்களை திறந்தருளும். அடியேன் மற்றவர்களுக்கு இடறலாய் இருந்த நேரங்களுக்காக மன்னியும் மற்றும் அவர்களுடன் உம்முடைய ஆசீர்வாதத்தை பகிர்ந்துக்கொள்ள என் இருதயத்தை திறந்தருளும். கிருபையின் பாத்திரமாய் என்னை எடுத்து பயன்படுத்தியருளும். இயேசுவின் மகா நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து