இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அப்போஸ்தலனாகிய பவுல் ஆதி விசுவாசிகளை விசுவாசத்திற்கு அடுத்த விஷயங்களில் மற்ற கிறிஸ்தவர்களை குற்றவாளிகளாக தீர்க்கிறதற்கு எதிராக கடிந்து கொண்டார். மற்றவர்களை நியாயம் தீர்ப்பது கர்த்தரின் வேலையென்று நமக்கு நினைப்பூட்டுகிறார். யாரை குற்றவாளிகள் என்று சொல்லுகிறார்களோ அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர் - அந்த நபர் அவருடைய வேலைக்காரன் என்பதையும் அவர் வலியுறுத்தினார். யாருக்காக கிறிஸ்து மரித்தாரோ, அவர்கள் கர்த்தருக்கு சொந்தமான வேலைக்காரர்கள், அப்படி பட்டவர்கள் மீது தீர்ப்பு வழங்க யாருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பவுலானவர் அவர்களையும் இன்னுமாய் நம்மையும் கேட்கிறார். எதிர்பாராதவிதமாக, நாம் மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற காரியங்களில் குற்றங்களை கண்டுபிடித்து நியாயம் தீர்க்க பார்க்கிறோம்,மாறாக அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள சொந்த பாவங்களை சரியாக கையாளுவதில்லை . நம்முடைய விசுவாசத்திற்கு பாதிப்பு இல்லாத விஷயங்களில் மற்ற விசுவாசிகளை நாம் நியாயந்தீர்க்கக்கூடாது. நம்முடைய பாவங்களுக்காகவும், நீயாய தீர்ப்புகளுக்காகவும் நாம் தேவனிடத்தில் பதிலளிக்க வேண்டும். நாம் எவைகளினால் நியாயம் தீர்க்கிறோமோ அந்த அளவின்படியே நம்மையும் கர்த்தர் நியாயம் தீர்ப்பார் என்று இயேசுவானவர் எச்சரிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே,அடியேனை மன்னியும். மற்றவர்கள் மீது எனக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ இல்லாத போது நான் தவறாக தீர்ப்பு வழங்கியுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இயேசுவானவர் அவர்களை மீட்டுக்கொள்ள மரித்தார் என்பதை அறிவேன். நீர் அவர்களை நேசிக்கிறீர், அவர்களுக்கான திட்டங்களை வைத்திருக்கிறீர் என்பதையும் அறிவேன். அடியேன் உம்முடைய பிள்ளைகளுக்கு உற்சாகமாய் இருக்கவும், ஒருபோதும் தடையாகயில்லாதபடி என்னை எடுத்து பயன்படுத்தியருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து