இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் விசுவாசத்தோடே அனுதின செய்கைகள் ஒன்றோடு ஒன்று இசைந்து செல்லும் ஒரு நீண்ட கால ஆவிக்குரிய இலக்குகள் உங்களிடம் உள்ளதா? "நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், ஆனால் தைரியத்தோடே இருக்க வேண்டும்" மற்றும் "ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்ற இந்த இரண்டையும் பவுலானவர் தன் வாழ்க்கையில் நிச்சயமாகக் கொண்டிருந்தார், உங்கள் நீண்ட கால ஆவிக்குரிய இலக்குகள் என்ன? பவுலானவரோடு இந்த மேன்மையான இலக்குகளில் நீங்கள் சேர முடியுமா? இந்த மேன்மையான ஆவிக்குரிய இலக்குகள் நம் யாவருக்கும் நன்மை பயக்குமா ? இந்த மேன்மையான இலக்குகளுடன் வாழ்வதை கடினமாக்குவது எவை ? இந்த காரியத்திலே உங்களை குறித்து எனக்குத் தெரியாது; ஆயினும் நான் வெட்கப்பட விரும்பவில்லை, நான் தைரியமாக இருக்க விரும்புகிறேன், மேலும் கிறிஸ்து என் சரீரத்தில் ஜீவனானாலும் சரி, மரணமானாலும் சரி, மகிமைப்படவேண்டுமென்று விரும்புகிறேன்.

என்னுடைய ஜெபம்

தியாகமும், சர்வ வல்லமையுமுள்ள தேவனே , என் பாவங்களுக்காக, குறிப்பாக முறையற்ற முன்னுரிமைகளுடன் வாழும் பாவத்திற்காக அடியேனை மன்னித்தருளும் . நான் என் வாழ்க்கையை எப்படியாய் வாழ்கிறேன் மற்றும் என்னைச் சுற்றி இருப்பவர்களுடன் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதில் உமது கிருபையையும் அன்பான இரக்கத்தையும் காண்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கூடுதலாக, என் வார்த்தையினாலும், கிரியையினாலும் உமக்கு மகிமையையும் , புகழ்ச்சியையும் இன்னுமாய் மற்றவர்களை ஊக்குவித்து தொடர்புகொள்ள எனக்கு தைரியத்தையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து