இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சந்தோஷம் ! மகிழ்ச்சி ! உற்சாகமுள்ள துதி . மகிழ்ச்சியான பாடல்கள். தேவனுடைய மகிமையையும் அவருடைய கிருபையையும் ஆண்டவராகிய இயேசுவுக்குள்ளாய் பகிர்ந்துக்கொண்டு நம்மை நீதிமான்களாய் ஆக்கினதை நினைத்துப் பார்க்கும்போது, ​​நாம் எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? தேவனானவர் மகிமையுள்ள பரிசுத்தமானவர் மற்றும் மகத்துவமானவர். அவர் அதிசயமான நித்தியமானவர், நீதியுள்ளவர். மாறாக , நாமோ பெலவீனர்கள் , மரணத்துக்கேதுவானவர்கள் , தவறு செய்கிறவர்கள் மற்றும் பாவமுள்ளவர்கள். ஆயினும்கூட, அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் , இயேசுவின் சிலுவை மரணத்தினால் அவர் நம்மை நீதிமான்களாக்கினார், இதனால் நாம் அவருடனே நித்திய வீட்டைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாகிறது . 2 கொரிந்தியர் 5:17ல் பவுலானவர் கூறியது போல்: பாவமில்லாதவனை நமக்காகப் பாவமாகும்படி தேவன் உண்டாக்கினார்; இந்த கிருபையைப் புரிந்து கொண்டால், தேவனுக்கு நம் பதிலானது மகிமையுள்ள துதியாக இருக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உமது நாமத்தைத் துதித்து, உமது கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். நீர் மெய்யாகவே என் மனத்தால் புரிந்து கொள்ள முடியாததை விட மிகவும் அற்புதமானவர் மற்றும் என்னால் நினைத்து பார்க்க முடியாததை விட உதாரத்துவமுள்ளவர் . எனவே, நீர் இருக்கிறவராகவே இருப்பதற்காகவும் நீர் எனக்கும், மற்ற அனைவருக்கும் செய்த நன்மைக்காகவும் உமக்கு என் ஆழ்ந்த பாராட்டுகளை என் வாழ்க்கையின் நடக்கையிலே அவை பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன், எல்லா துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் உம் ஒருவருக்கே செலுத்துகிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து