இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தொழுகை என்பது எப்பொழுதும் அவர் பிரகாரங்களில் பிரவேசிப்பதாகும் - அதாவது கிருபைக்குள் பிரவேசிப்பது, நன்றியுடன் அல்லது ஸ்தோத்திரத்துடனே பிரவேசிப்பது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பிரவேசிப்பது , ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறப்பு வழியில் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைவதாகும் . ஆனால் நாம் அவருடைய பிரகாரங்களில் நுழைவது என்பது தொழுகையின் அடிப்படை அல்ல. மாறாக, தொழுகை என்பது தேவனின் உண்மைத்தன்மை, நற்குணம், மாறாத கிருபை பற்றியது. தேவன் நமக்காகக் காத்திருக்கும் நிலையில், ஏதோ நமக்கு முன்பாக அநேகர் தேவனை தரிசிக்க இருப்பதை போலவே நாம் தேவனிடம் தாமதமாக வருகிறோம். அவர் இருந்த எல்லாவற்றிற்காகவும், அவர் இருப்பதற்காகவும், அவர் இருக்கப்போவதற்காகவும் அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். உள்ளே பிரவேசித்து அவருடைய சமூகத்திற்கு தொழுதுக்கொள்ள வருகிறோம். அவர்,நம்முடைய வருகைக்காக எப்பொழுதும் காத்திருப்பார் , ஏன்னென்றால் எல்லா தலைமுறைகளிலும் தேவன் உண்மையுள்ளவராகவும், மாறாதவராகவும் இருப்பதால் இதை நாம் செய்ய முடியும் (எப்பொழுதும் தொழுதுக்கொள்ள முடியும் ).

என்னுடைய ஜெபம்

சத்தியமுள்ள தேவனே , இஸ்ரவேலின் சர்வவல்லமையுள்ள கன்மலையானவரே , தலைமுறை தலைமுறையாக நம்பிய தேவனே , கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன் . உமது மாறாத கிருபைக்காகவும், இரக்கத்திற்காகவும் உம்மைப் போற்றுகிறேன். நான் உம்மைப் புகழ்கிறேன், ஏனென்றால் என் இருதயம் உமது விருப்பத்திற்கு இசைவாக இருக்க விரும்புகிறேன். நான் உம்மைப் புகழ்கிறேன், ஏனென்றால் என் நீண்ட ஆயுளுக்கு நான் தயார் செய்ய விரும்புகிறேன், உம்முடைய சமூகத்திலே . இயேசுவின் நாமத்தினாலே உம்மைப் போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து