இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு நல்ல ஸ்திரீயை கண்டுபிடிக்க வேண்டுமா? அப்படியென்றால்,கர்த்தரை தன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் கனப்படுத்துகிற மற்றும் துதிக்கிற ஒரு ஸ்திரீயை கண்டுபிடிப்போம். செளந்தரியம் , சரீர வலிமை மற்றும் ஆளுமை கூட மாறலாம் மற்றும் சீரழிந்தும் போகலாம் . எந்த பெண்ணின் இதயம் நங்கூரமிடப்பட்டு, தன் வாழ்க்கையில் கர்த்தருடைய பிரசன்னத்தால் உயிர்ப்பிக்கப்பட்டு , அவள் வாழ்நாள் முழுவதும் ஆசீர்வாதமாக இருக்கிறாளோ , அந்த ஸ்திரீயே நம் புகழுக்கும், கர்த்தருக்கும் உரிய ஸ்திரீயாக இருப்பாள்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , மீண்டும் ஒருமுறை, என் விசுவாசத்தை வடிவமைக்க உதவிய மற்றும் உமக்கான வழியைக் கண்டறிய உதவிய என் வாழ்க்கையில் உள்ள முக்கியமான ஸ்திரீகளுக்கு இந்த வாரம் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆசீர்வதிக்கப்படுகிற வழிகளை பார்த்து தேவபக்தியுள்ள ஸ்திரீகளை கண்டறியவும் , உம்மை கனப்படுத்தவும், உம் சபையை கட்டியெழுப்பவும் எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து