இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மறுபடியும் உறுதியளிப்பது புரிதலுக்கு அப்பாற்பட்டது! அதுதான் யோசேப்பிற்கான கிறிஸ்துவுக்குரிய வரலாற்றின் தொடக்கம் . எதை அவரால் புரிந்து கொள்ள முடியாதோ, யாருடைய உற்பத்தியில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லையோ அதுவே இப்போது அவரது சொந்த விசுவாசமான மற்றும் பெருந்தன்மையான இதயத்தின் அற்புதமான பயணமாக இருக்கும். அவர் நமது உலக இரட்சகருக்கு சரீர பிரகாரமான தகப்பன். அவரது கூடிவருதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் மரியாளிடம் ஒரு அதிசயம் நடந்தது என்பதை அவர் அறிந்து தனது வாழ்நாள் முழுவதும் வாழ்வார்.அவருடைய விசுவாசத்தையும் இந்த வரலாற்று நிகழ்வில் தேவன் அவரைப் பயன்படுத்தியிருப்பதையும் கண்டு , தேவன் நமக்காகச் சேர்த்து வைத்திருக்கும் எண்ணிமுடியாத சாத்தியக்கூறுகளுக்காக நாம் ஒவ்வொருவரும் விழித்தெழ வேண்டும். நாசரேத்தில் பிறந்த நம் பரிசுத்தர் இயேசுவுக்காக நம் இதயத்தை மீண்டும் தட்டி எழுப்ப இந்நாளையே நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது.

என்னுடைய ஜெபம்

தகப்பனே, யோசேப்பு உம் மீது வைத்திருந்த விசுவாசத்தை கண்டு நான் மிகவும் வியக்கிறேன் - அந்த நம்பிக்கை அவனால் புரிந்து கொள்ள முடியாததை கையாள உதவியது. இப்போது நான் யோசேப்பை போல உற்சாகத்துடன், திகைப்புடனும் உம்முடைய குமாரனும் என் இரட்சகருமானவரின் அற்புதத்தை மீண்டும் நினைவுபடுத்த வருகிறேன் . நான் அவரை நன்கு தெரிந்துகொள்ள முற்படுகையில், தயவுசெய்து அவரை எனக்கு சொந்தமாக்குங்கள் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து