இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு.யேசுவா.ஆவிக்குரிய உலகின் யோசுவா.மரியாளின் மகன் , தேவனின் குமாரன் , சாத்தான் நம் வாழ்வில் கட்டியெழுப்பிய கோட்டைகளைத் தகர்க்க உதவுகிறார் .நம்முடைய கலங்கிய ஆவிகளுக்கு அமைதியையும், நமது இருளின் அந்தகாரத்தினின்று மகிழ்ச்சியையும் தர அவர் வருகிறார். அவர் நமக்கு பணிவிடை செய்து ஆசீர்வதிக்க வருவதோடு மட்டுமல்லாமல், யாராலும் செய்ய முடியாததைச் செய்ய வருகிறார்.நம்முடைய பாவங்கள், அந்த ஆவிக்குரிய கறைகள், கலகங்கள், தவறுகள், மீறுதல்கள் மற்றும் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவர் வருகிறார்.தேவனை ஸ்தோத்தரிப்போம்! முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும், கண்டிக்கப் படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.(கொலோசெயர் 1:21)

என்னுடைய ஜெபம்

பிதாவே,இயேசு கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியினாலும் எங்களை மன்னித்து, கழுவி சுத்தமாக்கி, மறுரூபமாக செய்ததற்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து