இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் , உலகத்துக்கு ஒத்த வேஷம் போடுவது கிடையாது. இருளில் இருந்து மீட்கப்பட்ட நாம் நம் ஒளியை அதிகமாய் பிரகாசிக்க செய்ய வேண்டும். இது ஒரு ஆலோசனை அல்ல, மாறாக நம் ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவின் கட்டளை! சில சமயங்களில் நம் ஜீவனின் விளக்காகிய ஒளியை பிரகாசிக்கச் செய்வது என்பது தேவனின் ஒளி நம்மூலமாய் பிரதிபலிப்பதை மற்றவர்கள் கண்டு , நம் மூலமமாக தேவனை மகிமைப்படுத்த கற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும், மற்ற நேரங்களில், நாம் இருளாம் உலகத்தினின்று தனித்து நிற்கிறோம்,ஆகிலும் நம்முடைய விசுவாசத்தின் காரணமாக நம்மை தாக்க அல்லது அவதூறான விமர்சனம் பெறுகிறவர்களாக மாறுகிறோம். எவ்வாறாயினும், தாக்குதலுக்கு உள்ளானாலும், இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைத் தேடுபவர்களுக்கு நாம் நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருக்க முடியும். எப்படியிருந்தாலும், நாம் மறைந்து கொள்ள இடமில்லை. இருள் சூழ்ந்த உலககிற்கு நாம் இயேசுவின் ஒளியாய் இருந்து ; மற்றவர்களுக்கு முன்பாக பிரகாசிக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமான தேவனே, என்னைச் சுற்றியிருக்கும் தொலைந்துபோன இருண்ட உலகத்திற்கு இயேசுவின் ஒளியை நான் காண்பிக்கக்கூடிய அளவிற்கு தைரியத்துடனும் இரக்கத்துடனும் இருக்க என்னைப் பெலப்படுத்துங்கள். ஜீவ ஒளியாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து