இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் தம்முடைய பரலோக மகிமையை பற்றிக்கொள்ளாமல் , நம்மை இரட்சிக்க அதை ஒப்புக்கொடுத்தார். இப்போதும் அவர் தனது மாதிரியைப் பின்பற்றி அவருடைய இதயத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறார். அவர் நம்மை நடத்தியது போல நாமும் ஒருவரையொருவர் நடத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார், நம்முடைய சொந்த விருப்பத்திற்கு முன்னதாக மற்றவர்களின் தேவைகளையும், தேவனின் விருப்பத்தையும் வைக்கவேண்டும். இப்போது இந்த பெரிய மாற்றம் , முழுமையாக நடப்பதைக் நான் காண்பேன் என்று நம்புகிறேன்!

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே , உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் என் இதயத்தையும் மனதையும் மாற்றியருளும். என் நினைவுகள் உம் நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய இருதயத்தின் வாஞ்சை உம் குமாரனின் சித்தத்தை பிரதிபலிக்க விரும்புகிறேன். என் சித்தம் உம்முடைய ஆவியினால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது சரியல்ல அல்லது சிறந்ததல்ல என்று எனக்குத் தெரிந்தாலும், என் சொந்த முக்கியத்துவத்தையும், எனது சொந்த விருப்பத்தையும், என்னுடைய சுய-நியாயத்தையும் இரக்கமின்றிப் பற்றிக்கொள்ளும் என் போக்கையும் தயவுகூர்ந்து மன்னியுங்கள். என் மனதை உமது மகனின் மனதைப் போல் உருவாக்கியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து