இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவுக்காக, கிருபை + தைரியம் + கொடுத்தல் + மனஉறுதி = மகிமை . இரட்சிப்பு கணிதத்தில் உள்ள சமன்பாடுகளில் ஒன்று, அது மனித உணர்வை அதிகம் ஏற்படுத்தாது, ஆனால் விசுவாச கண்ணோட்டத்தில், இது சக்திவாய்ந்த ஞானம்.தேவனின் கிருபையால் இயேசு நம் உலகிற்கு வந்தார்.. பரலோகத்தை விட்டு வெளியேறி, மனிதனுடைய பாடுகளை எதிர்கொள்வதற்கும், மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்வதற்காக தன்னையே ஒப்புக் கொடுப்பதற்கும் இயேசு "தைரியம்" கொண்டிருந்தார்.சிலுவையின் கொடுமைகளையும் அவமானங்களையும் தாங்கும் மனஉறுதி இயேசுவுக்கு இருந்தது.எனவே தேவன் இயேசுவோடு அவருடைய மகிமையை பகிர்ந்து கொண்டார், மற்ற அனைவருக்கும் மேலாக அவரை உயர்த்தி வைத்தார்.நம்முடைய பலிகளையும் , கீழ்ப்படிதலையும், நம்முடைய பாடுகளையும் தேவன் மறக்க மாட்டார் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவுபடுத்த விரும்புகிறார்.. இயேசு தம்மை தாமே ஒப்புக்கொடுத்து நம்மை பரிசுத்தப்படுத்தியதால் அவர்,அவர்களைத் தம் மகிழ்ச்சியினாலும் மகிமையினாலும் கனப்படுத்துகிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே,கர்த்தாதி கர்த்தரே, நான் இயேசு கிறிஸ்து உமது குமாரன், என் இரட்சகர் மற்றும் கர்த்தர் என்று நம்புகிறேன்.என்னை முற்றிலுமாய் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அவரை எங்களுக்காக கொடுத்த உம் அற்புதமான அன்பிற்காக நன்றி. இயேசுவின் நாமத்திலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து