இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மீது தனிப்பட்ட அக்கறை கொண்டுள்ளார். இத்தனைக்கும், அவர் தனிப்பட்ட முறையில் இந்த அடையாளத்தை நமக்குத் தருகிறார். இம்மானுவேல் என்ற பெயரின் அர்த்தத்தை மத்தேயு விவரித்து காண்பித்ததால், அந்த அடையாளம் என்னவென்று நமக்குத் தெரியும் - தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம், இயேசு நம்மோடு வாழ வருகிறார். அவருடைய பிரசன்னம் தேவனின் பிரசன்னம். அவருடைய வாழ்க்கை தேவனுடைய அடையாளம். அவர் கன்னிகையின் கருவில் உண்டான அற்புதம் தேவனோடு மறைந்திருக்கும் மற்றும் நமக்கான அவரது கிருபையின் அறிக்கை.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், வல்லமையுள்ள ஆண்டவரே, பரலோகத்திலே தேவனோடு இருக்கும் மேன்மையை விட்டு அவரைப்பிரிந்து வெகுதூரத்திற்கு வந்தார் : இயேசுவின் மூலமாக நம்மிடையே வாழ வந்ததற்காக நன்றி. உம்முடைய குமாரனின் தியாகத்திற்காக இன்னுமாய் அவர் பட்ட வேதனை வலிக்காக நான் உமக்கு நன்றி செலுத்தி துதிக்கிறேன் . இந்த மாபெரிதான அன்பின் அடையாளம் விலையேறப் பெற்றது என்பதை நான் அறிவேன், எனவே என்னுடைய ஜெபம், பாடல், சிந்தனை ஆகிய எல்லாவற்றிலும் உம்மை துதிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே உமக்கு என் நன்றியை அடியேனுடைய வாழ்க்கையின் மூலமாக பிரதிபலிக்கட்டும். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து