இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தண்ணீர்! சோர்வுக்கும் தாகத்துக்கும் அது விலையேறப்பெற்ற ஈவு . தண்ணீர்! இந்த அத்தியாவசிய புத்துணர்ச்சி நம் அனைவருக்கும் தேவை. இருப்பினும், இயேசு, நாம் எடுத்துச் செல்லவோ,அல்லது சுத்திகரிக்கவோ தேவையில்லாத தண்ணீரை வழங்குகிறார். இல்லை, இது நமக்குள் ஊற்றெடுக்கும் நீர். இது பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொண்டுவரும் தண்ணீர்.இப்பொழுதே தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நித்திய ஜீவனை நமக்குத் கொடுக்கும் தண்ணீர் இது!

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் ஒரு கிறிஸ்தவனாக மாறினபோது என்னில் வாழ இயேசு பரிசுத்த ஆவியை அனுப்பினார் என்பது எனக்குத் தெரியும். எனது பிடிவாதமான விருப்பத்தையும், என் பாவ ஆசைகளை ஆவியின் வல்லமையால் வெல்லவும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னம் தரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் என் வாழ்க்கை வெளிப்படுத்தும் என்று கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து