இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வசனத்தில் மேய்ப்பர்களும் தேவனின் மகிமையும் ஒரே வாக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆபிரகாம், மோசே, தாவீது ஆகியோரை மேய்ப்பர்களாகவும் நாம் பார்க்கிறோம் மற்றும் தேவனானவரை ஒரு மகா பெரிதான நல்ல மேய்ப்பராகவும் சங்கீதம் 23ஆம் அதிகாரத்தில் மூலமாக அறிந்துக்கொள்ளுகிறோம், மேய்ப்பர்கள் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளனர், ஆகிலும் அவர்கள் அதிகமாக மதிக்கப்படவில்லை. அவர்கள் மீது செம்மறி ஆடுகளின் வாசனை வீசின. அவர்கள் ஆடுகளுடன் தங்கள் நேரத்தைக் கழித்தனர். அவர்கள் உண்மையில் பரிசுத்தமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாக தேவனுக்கு பயந்தவர்கள் என்று கருதும் அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை இல்லை. ஆகவே, தேவன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு தனது தேவதூதர்களின் மூலமாக அறிவிக்கத் தேர்ந்தெடுத்தபோது, ​​அவர் தனது கருத்தைத் மிகவும் ஆழமாக தெளிவுபடுத்துகிறார்: எல்லோரும் தேவனால் நேசிக்கப்படுகிறார்கள், அனைவரும் தேவனை கிட்டி சேர முடியும் , மேலும் அனைவரையும் தேவன் விரும்புகிறார் என்ற கருத்தை சுட்டிக்காட்டுகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே,அநேக வேளைகளில் ஒரு நபரின் வெளிப்புற தோற்றமும் அவருடைய நற்பெயருமே நான் அவர்களை நடத்தும் விதத்தை கொண்டுள்ளது என்பதை நான் உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இன்று, இயேசுவிலுள்ள உமது கிருபையைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீர் எவ்வளவு விரும்புகிறீர் என்பதில் அடியேன் உறுதியாக இருக்கிறேன். எல்லா மக்களையும் நேசிக்கும் இருதயத்தையும் அவர்களுடன் உமது கிருபையை பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தையும் எனக்குக் தந்தருளும்.இயேசுவின் நாமத்தினாலே நான் இவைகளுக்காக ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து