இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு தேவனின் குமாரனாகவும், மரியாளின் மகனாகவும் இருக்கும்போது, ​​அவர் நமக்காகவும் கொடுக்கப்பட்டார். இயேசுவானவர் இவ்வுலகிற்காக கொடுக்கப்பட்ட பிள்ளை அதினால் மாத்திரமே நீங்களும் நானும் தேவனின் புத்திரராக மாற முடியும். இயேசுவின் மூலமாக நாம் தேவனை பிதாவாக பெற்றுக்கொண்டிருக்கிறோம், ஆகையினாலே இயேசுவை காட்டிலும் இந்த உலகத்திலே நாம் பெற்றுக்கொள்ள தக்கதான ஒரு பெரிய ஈவு நமக்கு என்ன இருக்கக்கூடும் ?.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , மிகவும் மகிமை பெற்ற ஒரு நாளில், இந்த உலகமானது சற்று நிதானித்து , உம்முடைய ஈவான இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது போது, ​​நான் சொல்ல நினைப்பதெல்லாம் "உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக " பின்னர் நான் மீண்டும் எனக்குள் நினைவுப்படுத்திக் கொள்ளுகிறேன் , என்னிடம் உள்ள அனைத்தும் அவரிடமிருந்து வந்தது, ஏனென்றால் அது அவருடைய நாமத்தில் உள்ளது, இயேசு கிறிஸ்து, இம்மானுவேல், என்ற வல்லமையுள்ள அவருடைய நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து