இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புத்தாண்டுக்கான உங்களுடைய குறிக்கோள் மற்றும் திட்டங்கள் என்ன? உங்களுக்கு பெரிய கனவுகள் மற்றும் பாராட்டத்தக்க குறிக்கோள் உள்ளதா? நான் நிச்சயமாக நம்புகிறேன். ஆனால் நான் ஏன் எனது குறிக்கோள்களை நிர்ணயித்தேன் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான எனது புதிய திட்டங்களை உருவாக்குவதை நான் தீவிரமாகப் பார்க்கும்போது தயவுக்கூர்ந்து என்னுடன் இணையுங்கள் . இந்த ஆண்டின் கடைசியில் , கொடுப்பதற்கான இந்த சிறந்த காலத்தில் , எதிர்காலத்திற்கான நமது திட்டங்கள் பொறாமை, இச்சை அல்லது பேராசை ஆகியவற்றின் அடிப்படையில் சுயநலமாக இல்லை என்பதை உறுதி செய்வோம். மாறாக, தேவனின் மகிமைக்காக உயர்ந்த சிகரங்களை அடைய நம் இருதயங்களை அமைத்து, மற்றவர்களை ஆசீர்வதிக்க பெரிய காரியங்களைச் செய்வோம். இல்லையெனில், பெரிய காரியங்களைச் சாதிப்பதற்கான நமது சுயநல முயற்சிகள் அனைத்தும் இறுதியில் குழப்பத்திலும், மனவேதனையிலும், அழிவிலும் முடிவடையும்.

என்னுடைய ஜெபம்

நித்திய பிதாவே , வரவிருக்கும் ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயம் செய்ய நான் முயலும்போது தயவுசெய்து என்னுடனே இருப்பீராக . உம்முடைய மகிமைக்காக நான் பெரிய காரியங்களைச் செய்ய விரும்புகிறேன். நான் வாழும் இவ்வுலகில் மற்றும் நீர் என்னை அனுப்பிய மக்கள் மத்தியில் உம் விருப்பத்தை நிறைவேற்ற என்னைப் பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து