இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மீது வைத்திருக்கும் சித்தத்தை பகுத்தறிவது கடினம் அல்ல. அவர் நம்மை இரட்சிப்புடன் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.அவரது குமாரனின் நம்பமுடியாத ஈவு இந்த உண்மைக்கு வல்லமையுள்ள சான்றாகும். ஆனாலும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்பு என்பது நம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்க வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் தினமும் அவருடைய இரட்சிப்பைப் பிரதிபலிக்க வேண்டுமென்றும் , அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார் .நாம் நீதியாக நடந்து, நம் உறவுகளில் இரக்கத்தைப் பின்தொடர்ந்து, தாழ்மையான இதயத்தோடு அவரை தொழுதுக் கொண்டால் , தேவனுடைய இரட்சிப்பு நம் வாழ்வில் உண்மையானதாக மாறி, அவருடைய கிருபையால் மற்றவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இயேசுவின் மொழியில் தேவனுடைய ராஜ்யம் வருவதற்கும், பரலோகத்தில் இருப்பது போல பூமியிலும் செய்யப்படுவதற்கும் நாங்கள் வேலை செய்கிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையும், இரக்கமும் உள்ள பிதாவே , நான் இந்தப் புத்தாண்டைத் தழுவும்போது, ​​உங்கள் இதயம் என்ன பார்க்கிறது என்பதைப் பார்க்க என் கண்களுக்கு உதவுங்கள்.பாவத்தை வெறுக்கவும், இரக்கம் தேவைப்படும் அனைவரிடமும் இரக்கம் காட்டவும் எனக்குக் கற்றுக் கொடுங்கள். துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலை வெறுக்கும்போது, ​​உண்மையை அறிந்து நியாயமாக செயல்பட எனக்குக் கற்றுக் கொடுங்கள். உமது பரிசுத்த மகத்துவத்திற்கும் எனது சீரற்ற தன்மைக்கும் இடையே உள்ள பெரிய தூரத்தைப் பற்றி சிந்திக்க உமது ஆவியின் மூலம் என்னைத் தூண்டுங்கள். என்னை முழுவதுமாக உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கள், இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து