இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகபாரம்பரிய வழக்கம் தேவையுள்ளவர்களுக்கு மாற்றாக ஊழியத்தை அளிப்பது எளிமையாக இருக்குமா? எனக்கு தெரியும் என்னால் கூடும் ! ஆனால், அவரைப் பற்றிப் பேசுவதிலும், அவருடைய நற்கிரியைகளை கொண்டாடுவதிலும் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அவரைப் போலவே நாம் மற்றவர்களைக் பராமரித்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். லூக்கா 4:18-19 வில் இயேசு தனது ஊழியத்தை துவங்கும்போதும் அல்லது தேவனை பிரியப்படுத்தும் வகையான பக்தியைப் பற்றி யாக்கோபு கூறும் போதும் (யாக். 1:26-27), மற்றவர்களை தேவன் எப்படி நடத்தினாரோ அதே போல நாமும் நடத்துவதே மெய்யான விசுவாசமென்று நாம் உணர வேண்டும். இன்றைய வசனம் தேவன் என்ன செய்கிறார் என்பதை விளங்கச்செய்து , அதே வழியில் நாமும் வாழ அறிவுறுத்துகிறார்.

என்னுடைய ஜெபம்

அனைத்து ஆறுதல்களின் மாதேவனே , உம் அன்பு தேவைப்படுபவர்களைப் பார்க்க இன்று என் கண்களைத் திறந்து, அவர்களுக்குச் ஊழியம் செய்வதற்கான கவனத்தையும் நேரத்தையும் இரக்கத்தையும் எனக்குக் கொடுத்தருளும் . இயேசுவின்கிரியை இன்று என் வாழ்வில் காணப்படட்டும். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change