இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எனது தேவைகள் மற்றும் எனது பாதுகாப்பைப் பற்றி முதலில் நினைப்பது எனக்கு மிகவும் எளிதானது. நான் சுயநலமாக இருக்க விரும்பவில்லை, ஆனால் எனது நேரத்தை செலவிடும் காரியங்களை பற்றிய முடிவுகளை எடுக்கும்போது, ​​எனது கண்ணோட்டத்தில் மட்டுமே விஷயங்களை கண்ணோக்குவது எனக்கு மிகவும் எளிதானது. ஆனால் தேவனுடைய ஜனங்களைப் பொறுத்தவரை, "நாம்" மற்றும் "எங்களுக்கு " என்கிற கண்ணோட்டமே மிகவும் முக்கியமானது, மாறாக "நான்" மற்றும் "என்னுடைய" என்கிற கண்ணோட்டம் கூடாதது . இஸ்ரேலின் கிழக்கு கோத்திரத்தார் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர். ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக தங்கள் சொந்ததேசத்தில் குடியேறும் வரை போராடுவதை விட்டுவிட்டு இருக்கிற இடத்திலேயே தங்கிவிடக்கூடாது . இன்று தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கும் அதுவே சத்தியமாய் இருக்கிறது . நாம் நமது தேவைகளை மட்டுமல்ல, கிறிஸ்துவில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் தேவைகளையும் பார்க்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , தயவு செய்து எனக்கு அதிக இரக்கத்தையும், உதாரத்துவமான இருதயத்தையும் தாரும் , இதினால் இன்று கிறிஸ்துவுக்குள் போராடி கொண்டிருக்கும் ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரிக்கு உம்முடைய மகா பெரிதான அன்பை என்னால் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து