இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நியாயம்தீர்க்கப்பட்டோம் , சமாதானம் , பிரவேசிக்கும் சிலாக்கியம் , கிருபை , நம்பிக்கை மற்றும் மகிமை ஆகியவை அற்புதமான ஈவுகள் ! இந்த ஈவுகள் ஒவ்வொன்றும் நம்முடையது - ஒரே காரணம், ஒரே ஆண்டவர் மற்றும் ஒரே தேவன் : தேவனின் குமாரனும் நம் இரட்சகருமான இயேசு கிறிஸ்து. தேவனின் மகிமைக்குள் பங்குகொள்வதற்கான நமது உறுதியான நம்பிக்கையில் மகிழ்ச்சியடைவதற்கு இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் கதவைத் திறக்கிறது. கடினமான காலங்களில், இந்த நம்பிக்கை மதிப்புமிக்கது. நல்ல காலங்களில், இந்த நம்பிக்கை இன்னும் பெரிய விஷயங்களை நமக்கு உறுதியளிக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், இந்த உறுதியான நம்பிக்கை, தேவனின் மகிமைக்காக இயேசுவுக்காக வாழ நமக்கு அதிகாரம் அளிக்கும்!

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, உமது இரட்சிப்பின் மூலம் எங்களை ஆசீர்வதிக்க நீர் செய்த அனைத்திற்காகவும் நாங்கள் உம்மைப் போற்றுகிறோம். அன்புள்ள ஆண்டவரே, திரும்பி வருவீர் என்ற உம் வாக்குறுதிக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம் மற்றும் உமது முழு மனதோடே போற்றுகிறோம் , வெளிப்படுத்தப்படாத மகிமையில் பங்குகொள்ள எங்களை அழைத்தற்காக நன்றி . அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். நாங்கள் காத்திருக்கையில், பிதாவே, பரிசுத்த ஆவியின் வல்லமையால், இயேசுவின் மகிமைக்காக, உமது ஊழியத்துக்காக எங்களைச் சுத்திகரித்து, உபயோகப்படுத்துங்கள். எங்கள் மத்தியஸ்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து