இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கிறிஸ்தவர்கள் பூரணர் அல்ல, மாறாக மன்னிக்கப்பட்டவர்கள் !" இந்த வாசகத்தை வாகனங்களில் பின்னால் நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது இது போன்ற எங்கேயாவது அல்லது ஏதாவது சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு வகையில் இது உண்மைதான். ஆனால், தேவனின் பார்வையில், கிறிஸ்தவர்கள் குற்றமற்றவர்கள் . இந்த வார்த்தைகளை கொலோசெயில் உள்ள மக்களுக்கு பவுலானவர் கொடுத்த ஒரு நம்பமுடியாத செய்தியாகும் . இயேசுவின் பலியின் காரணமாக, தேவன் நம்முடைய குறைபாடுகளைக் காண்பதில்லை. கிறிஸ்துவின் பரிபூரணத்தினாலும் மற்றும் நமக்கான பரிபூரண பலியின் மூலமாக அவர் நம்மை காண்கிறார் . பவுலின் இந்த வார்த்தைகளைக் கேட்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்! தேவன் உங்களை எப்படி காண்கிறார் என்பதை சிந்தித்து பார்த்து நன்றி செலுத்துங்கள் ! இயேசுவுக்குள்ளாய் தேவன் நமக்கு பாராட்டின கிருபையை எண்ணி தாழ்மையுடன் இருங்கள், மகிழ்ந்து களிகூறுங்கள் ! அவருடைய கிருபையினால் , நாம் "அவருடைய பார்வையில் பரிசுத்தர்களாகவும், பழுதற்றவர்களாகவும், குற்றஞ்சாட்டப்படாதவர்களாகவும்" இருக்கிறோம்! அவர் நமக்கு ஒன்றையும் விலக்கிவைக்கவில்லை ஆகையால் சொல்லுவோம் "அல்லேலூயா!"

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னை பரிசுத்தமாக்க நீர் கொடுத்ததான ஜீவ பலிக்காய் உமக்கு கோடான கோடி நன்றி. இயேசுவின் பரிபூரணத்தினாலும் அவருடைய மாபெரிதான தியாகத்தின் மூலமாய் என்னுடைய மதிப்பை நீர் காண்கிறதற்காக உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவானவர் , என் பாவத்திற்கான கடனை செலுத்தி தீர்த்து , அவர் பரிபூரணத்தை என்னுடனே பகிர்ந்து கொண்டதற்காகவும் உமக்கு நன்றி. உமது கிருபையினால் நீர் எனக்கு அருளின பரிபூரணத்தை இன்றும், ஒவ்வொரு நாளும் என் வாழ்கையிலே அவை பிரதிபலிக்கட்டும் . என் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து