இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் "தேவனை தேடுபவரா"? முன்காலத்தை திரும்பிபார்க்கும்போது, குறிப்பாக காரியங்கள் நன்றாக நடக்கும்போது அல்லது பெரும் பொல்லாத காலங்களில், தேவனை தேடுகிற உணர்வுள்ள ஜனங்களை , அவரால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவர் கண்ணோக்குகிறார்! அவர் தேடுகிறார் ! அது அவருக்கு முக்கியம்! பாவமானது , தேவனுடனான ஆதாம் ஏவாளின் உறவை பாவம் அழிக்கும் முன், குளிர்ச்சியான மாலை நேரத்தில் தேவன் அவர்களுடன் சம்பாஷித்தது போல, நம்மோடும் அப்படியிருக்க ஏங்குகிறார். ஆனால் அவர் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்திற்கு ஏங்குகிற இருதயங்களைத் மட்டுமே தேடுகிறார். எனவே நாமும் தேவனுடைய பிரசன்னத்திற்காக வாஞ்சிப்போமாக !

என்னுடைய ஜெபம்

எங்களை நோக்கி பார்க்கும் பிதாவே , சர்வவலமையுள்ள ராஜாவே , உம்மை அறியவும், உம்மால் அறியப்படவும் என் இருதயம் வாஞ்சிகிறது . உம்மை நேரில் பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அந்த நாள் வரை, தயவுசெய்து அடியேனுடைய வாழ்க்கையில் உம் சமூகத்தை எனக்கு வெளிப்படுத்துங்கள் , என் குணாதிசயத்தின் வழியாக உம் சித்தத்தைச் நிறைவேற்றுங்கள் . மற்றவர்கள் என் வாழ்க்கையைப் பார்த்து, நான் உம்முடைய பிள்ளை என்பதையும், உமது பரிசுத்த நாமத்தை உயர்த்த நான் வாழ்கிறேன் என்பதையும் அறிந்துகொள்ளட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து