இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் மனுஷ சாயலில் தேவனுடைய கைவேலையாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். அவர் நம்மை தாயின் கருவில் இருக்கும் போதே உண்டாக்கினவர் (சங்கீதம் 139:13-16) மற்றும் கிறிஸ்துவுக்குள் நம்மை மீண்டும் ஜெநிப்பித்து , அவருடைய அற்புதமான கிரியையை வெளிப்படுத்தினார். தேவனே சிறந்த குயவனும் கைவினைஞருமானவர் ! அவருடைய தலைசிறந்த படைப்புகளில் நீங்களும் ஒருவர்! தேவனானவர் நம் ஒவ்வொருவரையும் நற்காரியங்களைச் செய்கிறதற்கும் மற்றும் அவருடைய அனந்த ஞானத்தை காண்பிப்பதற்கும் நம்மை பயனுள்ள பாண்டமாக இருக்கும்படி சிருஷ்டித்தார். நாம் ஒருவருக்கும் அப்பிரயோஜனமற்றவர்கள் என்று எவரும் , குறிப்பாக சாத்தான் அப்படி என்னும்படி நாம் இடம் கொடுக்கவேண்டாம் . அவரைக் கனப்படுத்தவும், அவருடைய மக்களை ஆசீர்வதிக்கவும் தேவன் நம்மைப் படைத்து வரம் கொடுத்தார் (1 பேதுரு 4:10-11). அவரது கிருபை நம் ஒவ்வொருவரையும் இரட்சித்தது, மேலும் பெலன் மற்றும் உறுதியுள்ள ஒன்றாக மாற்றுவதின் மூலம், அவர் மற்றொரு தலைசிறந்த படைப்பை உலகுக்கு வழங்குவார்! நாம் களிமண்ணிலிருந்து தேவன் என்றென்றும் முக்கியமான ஒரு வாழ்க்கையை உருவாக்குவார்! நம்முடைய எதிர்மறையான சுய பேச்சு, மற்றவர்களின் விமர்சனம் அல்லது சாத்தானின் இழிவான வார்த்தைகளுக்கு அல்ல, நம்மைப் பற்றிய தேவனின் உயர்ந்த அபிப்பிராயத்தின்படி வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, என்னை அறிந்ததற்காகவும் , இயேசுவுக்குள் உம் கிருபையினால் என்னை மீண்டும் உருவாக்கியதற்காகவும் உமக்கு நன்றி. உமது சித்தத்தை செய்ய என்னைப் பயன்படுத்தவும், பொருத்தமான நபர்களிடம் என்னை வழிநடத்தவும், அதனால் நான் அவர்களுக்கு மிகவும் திறம்பட ஊழியம் செய்ய முடியும். இயேசுவின் கிருபை நிறைந்த நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து