இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் முன்னதாக நம்மில் அன்புகூர்ந்தார் ! அவருடைய கிருபையை விசுவாசிப்பது அல்லது புறக்கணிப்பது என்ற நம்முடைய முடிவைப் பொருட்படுத்தாமல், நம்மை மீட்கும்படியாய் அவர் தம்முடைய நேசக்குமாரனை தந்தருளினார் . அவருடைய குமாரனின் மரணத்தை நம்முடைய பாவங்களுக்கான கிருபாதாரபலியாக ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் திறனை நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நிபந்தனை மாத்திரமே, அவற்றை யோவான் ஆசிரியர் 1யோவான் 2: 1-2 வலியுறுத்துவது போல, அவர் உலகில் உள்ள அனைவருக்காகவும் மரித்தார் என்பதை நாம் உணர வேண்டும்!

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற ராஜாவே , சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் ஏன் என்னில் அன்புகூர்ந்தீர் மற்றும் எனக்காக மரிக்க உம் குமாரனாகிய இயேசுவை அனுப்பினீர் , என்னால் ஒருபோதும் இந்த அன்பை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை . உம் மாசற்ற மற்றும் மகாப்பெரிய அன்பிற்காக உமக்கு நன்றி. என் பாவங்களுக்கு விலையாக நீர் கொடுத்த பலிக்காக நன்றி. என்னை மீட்க வந்ததற்கு நன்றி. இயேசுவே உமது நாமத்தினாலும் , உமது பரிந்துரையாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து