இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலகம் முழுவதையும் , ஒப்பிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்த மற்றும் அநேக அற்புதமான பலவகை உயிரினங்கள் இருக்கின்றன , இத்தகைய திகைப்பூட்டும் மகா பிரமாண்டத்தின் மத்தியில் நமது முக்கியத்துவமின்மை மற்றும் இயலாமை ஆகியவை ஒரு பொருட்டாக இல்லாமற் போகலாம். ஆனால் எளிமையான நம்பிக்கையின் தருணங்களில், அத்தகைய அதிசயங்களை உருவாக்கி பராமரிப்பவர் மீது நமது கனம் மற்றும் அவருடைய பலத்த காரங்களுக்குள் அடங்கியிருப்பதன் மூலம் நாம் அமைதியாக இருக்க முடியும், மேலும் நம் வாழ்க்கை அவருடைய கரங்களில் உள்ளது என்று பெரும் ஆறுதலைக் காணலாம்.

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள மற்றும் அதிசயமான தேவனே , உமது மகிமையை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், என்னை தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. எனக்கு உம்முடைய அன்பு, கவனிப்பு, பாதுகாப்பு, ஆசீர்வாதம், இரக்கம் , மன்னிப்பு மற்றும் பிரசன்னம் தேவை. நீர் இல்லாமல், எனக்கு நிலையான முக்கியத்துவம் எதுவும் இல்லை. நீர் எப்பொழுதும் என் அருகியிலேயே இருப்பீராக . இயேசுவின் நாமத்தினாலே தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து